COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமா உயிரிழந்தார். இந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதையடுத்து, பல ஊடகங்கள் “வனிதாவின் கணவர்” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி வந்தனர். இதைப்பார்த்த வனிதா விஜயகுமார் கோபமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


 


வனிதா-பீட்டர் காதல் திருமணம்:


 


90’ஸ்களில் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்த வனிதா விஜயகுமார் வெகு சில படங்களிலேயே நடித்துள்ளார். இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் காலடி எடுத்து வைத்ததை அடுத்து மிகவும் பிரபலமானார். வனிதா, அவரது கோபத்திற்கு பெயர் போனவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த காலத்தில் இவரை பிடிக்காதவர் பல பேர் இருந்தனர். வனிதா, பீட்டர் பால் என்பவரை 2020ஆம் ஆண்டு  கொரோனா ஊரடங்கின் போது திருமணம் செய்துகொண்டார். 


இதையடுத்து, பீட்டர் பால் தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக அவரது முதல் மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது, பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வனிதா, பீட்டர் பாலை விவாகரத்து செய்தார். பீட்டரின் குடிப்பழக்கமும் அவருடைய பிற கெட்ட பழக்கங்களும் அதற்கு காரணமாக கூறப்பட்டது. 


 


மேலும் படிக்க | பிக்பாஸ் அசீமை கலாய்த்த நடிகை வனிதா விஜயக்குமார்


 


பீட்டர் மரணம்-வனிதாவுன் உணர்வுபூர்வமான போஸ்ட்:


 


பீட்டர் பாலுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாகவும் கடந்த சில நாட்களாக அதிலிருந்து மீள முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் அவதிப்பட்டு வந்ததாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் பரவியது. இதையடுத்து, கடந்த மாதம் 29ஆம் தேதி, பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். 


 


பீட்டர் பாலின் மரணசெய்தியை அடுத்து, வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு எமோஷனல் போஸ்டை வெளியிட்டார். அதில், “அவரவருக்கே யார் உதவி செய்து கொள்கிறார்களோ அவர்களுக்கு கடவுள் உதவுவார் என எனது அம்மா என்னிடம் கூறியுள்ளார். இத்தனை மன உளைச்சலுக்கு ஆளான பிறகு உங்களுக்கு இப்போது கடைசியாக அமைதி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். எங்கிருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருங்கள்” என்று கூறியிருந்தார். 


 


வெகுண்டெழுந்த வனிதா:


 


பீட்டரின் மறைவு குறித்த செய்தியை வெளியிட்ட செய்தி நிருவனங்கள் பல, அவரை வனிதாவின் கணவர் என குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து வனிதா கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு,


 “2020ஆம் ஆண்டில் நானும் பீட்டரும் குறுகிய கால அளவில் ஒரு உறவில் இருந்தோம். நானும் அவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் அவருக்கு மனைவியும் இல்லை அவர் எனக்கு கணவரும் இல்லை. பீட்டர் எனது கணவர் என்று குறிப்பிடுவதை நிறுத்துங்கள். நான் எனது வாழ்க்கையை இப்போதுதான் மகிழ்ச்சியாகவும் முழுமையாகவும் வாழ்ந்து வருகிறேன். இவ்வாறான செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள்” என்று வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 


 


ராபர்ட் மாஸ்டருடன் வனிதா:


 


கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வைரலானது. வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் முன்னாள் காதலர்கள் என்பதால் இவர்கள் மீண்டும் இணைந்தனரா என ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிப்பட்டது. ஆனால் இதுகுறித்து இரு தரப்பினரிடையே இருந்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 


 


 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ