ஒருவரின் சுயலாபத்திற்காக ஒட்டுமொத்த சமூதாயமும் பலியாவதாக வன்னியர் குல சத்ரியர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆதங்கம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்கே சுரேஷ் நடிக்க எதிர்ப்பு


பாமக கட்சியை சேர்ந்த காடுவெட்டி குருவின் கதையை தழுவி காடுவெட்டி என்ற படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிட கூடாது என்றும் குற்றம் நிருபிக்கப்படும் வரை ஆர் கே சுரேஷ் நடிக்க கூடாது எனவும் வன்னிய குல சத்ரியர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான ஜெய்ஹரி கூறியுள்ளார்


இது குறித்து அவர் பேசிய போது, 


“கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி நடித்திருப்பதால் சிவாஜியை கப்பலோட்டிய தமிழனாக பார்த்தோம். தற்போது  வன்னியர் சமுதாயத்திற்காக பாடுபட்டது மல்லாது மற்ற சமுகத்திற்காகவும் பாடுபட்ட காடு வெட்டி குருவின் கதையை தழவி எடுக்கப்பட்டுள்ள காடுவெட்டி படத்தில் பொதுமக்களின் பணம் சுமார் 2400 கோடிக்  மேல் ஏமாற்றிய ஆருத்ரா நிறுவனத்திற்கு உதவிய ஆர்கே சுரேஷ் நடிப்பதால்  காடுவெட்டியார் தவறாக பார்க்கப்பட்டு விடுவார்” என்று கூறியுள்ளார். 


மேலும், குற்றப்பின்னணி உடைய ஒருவர் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க கூடாது எனவும் நிரபராதி என நிரூபிக்கும் வரையில் ஆர்கே சுரேஷ் படமே நடிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். தனிமனித லாபத்திற்காக ஒரு சமுதாயமே பலிகடாவாக ஆகுவதை ஏற்க முடியாது எனவும் அவர் கூறினார்.