நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘வெல்வெட் நகரம்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிமுக இயக்குனர் மனோஜ் குமார் இயக்கத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்மை பாத்திரம் ஏற்று நடித்து வரும் திரைப்படம் வெல்வட் நகரம். இப்படத்தில் இவர் மதுரையில் பணியாற்றும் பத்திரிகையாளராக நடித்து வருகிறார். 



இவருடன் இப்படத்தில் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அஜெய் உட்பட பலர் நடிக்கின்றனர். பத்திரிகையாளராகப் பணியாற்றும் வரலட்சுமி, பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான ஆதாரத்தைத் தேடி சென்னைக்கு வருகிறார், அதன் பின்னர் சென்னையில் அவர் சந்திக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகிறது. இப்படத்தை மேக்கர்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் அருண் கார்த்திக் தயாரிக்கிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பகள் சென்னை, கொடைக்கானல், மதுரை ஆகிய பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!