வாரிசுக்காக வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிய சிம்பு! தெறி அப்டேட்
வாரிசுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நடிகர் சிம்பு இறங்கிய அப்டேட் சுடசுட வெளியாகி விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வாரிசு’. இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்தாண்டு, அதாவது பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாக இருக்கிறது. இதற்காக படத்தின் பிஸ்னஸ் பேச்சுகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தை போனி கபூர் தயாரித்திருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட இருக்கிறது.
மேலும் படிக்க | சசிகுமாரின் காரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
இதனால், இருபடங்களுக்கும் சரி சமமாக தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பெரும்பாலான தியேட்டர்களை துணிவு படத்திற்காக உதயநிதி ஸ்டாலின் லாக் செய்துவிட்டதால், மிக குறைந்த அளவிலான தியேட்டர்களில் மட்டுமே வாரிசு படம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இதுவே விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. சில உள்ளடி வேலைகளும் படத்துக்கு எதிராக நடந்து கொண்டிருப்பதால் விஜய் ரசிகர்கள் அப்செட் மோடில் இருக்கின்றனர்.
அவர்களை குஷிப்படுத்த வாரிசு படம் தொடர்பாக சுடச்சுட ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே விஜய் குரலில் வெளியான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் மெகா ஹிட் அடித்திருக்கும் நிலையில், அடுத்த சிங்கிள் சிம்பு குரலில் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. விஜய்க்காக சிம்பு பாடியிருக்கும் பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இது விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சிம்பு பாடியிருக்கிறார் என்றால் அந்தப் பாடல் நிச்சயம் மாஸாக இருக்கும் என இணையவாசிகள் சிலாகித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சோதனை மேல் சோதனை... வாரிசுக்கு புதிய பிரச்னை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ