தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது தொலைக்காட்சி ரசிகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் புதிய சீரியல் 'இதயம்' தொடங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதயம்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியுள்ள புத்தம் புதிய சீரியல் இதயம். 


சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் வாசுவின் நிலையம் ஆதிக்கு பொருத்தப்பட்ட நிலையில் கணவனை பறிகொடுத்து வீட்டுக்கு வந்த பாரதியை அவரது மாமனார் ஆத்மா 16 வது நாள் காரியம் முடிந்த பிறகு அழைத்துச் சென்று விட வேண்டும் என சம்பந்தி வீட்டாரிடம் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல் இதை மாற்றி அறுவை சிகிச்சை முடிந்தும் ஆதி கண் விழிக்காத காரணத்தினால் டாக்டர் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என சொல்லியிருந்தார். 


இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் பாரதி தனது மாமனாரிடம் சென்று காதலித்து கல்யாணம் பண்ணது அப்படி ஒரு பெரிய குத்தமா? வாசி விட்டுப் போனதுக்கு பிறகும் ஏன் இப்படி பேசுறீங்க என்று கேட்க ஒரு ப்ளாஷ்பேக் ஓபன் ஆகிறது.


அதில் ரத்னம் வாசு, பாரதி காதல் விஷயம் தெரிஞ்சு பாரதியின் வீட்டுக்குச் சென்று பேசி விட்டு வந்த பிறகு நிச்சயதார்த்தத்தின் அன்று வாசு வீட்டுக்கு தெரியாமல் பாரதியை திருமணம் செய்து கொண்டு வந்ததால் தான் இவ்வளவு கோபம் என்பது தெரிய வருகிறது. 


இதனை தொடர்ந்து அப்பாவை இழந்து தவிக்கும் வாசுவின் மகளின் கனவில் வாசு தோன்ற அவன் அப்பா என அலறி எழுந்து கொள்கிறாள். 


மறுபக்கம் சரியாக இதே நேரத்தில் கண் விழிக்காமல் இருந்து வந்த ஆதியும் ஆபத்தை கடந்து கண் விழிக்க மொத்த குடும்பமும் சந்தோஷம் அடைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


ஜனனி அசோக் குமார், புவியரசன் உட்பட பலர் இந்த சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளனர். இதயம் இடம் மாறினாலும் அதில் இருக்கும் உண்மை காதல் மறையவில்லை என்பதுதான் இந்த சீரியலின் மையக்கரு. முழுக்க முழுக்க மாறுபட்ட காதல் கதையாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ள இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோக்கள் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. 


இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?


இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்: சகோதர சகோதரி பாசத்தை அழகாக வெளிப்படுத்திய 5 தமிழ் படங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ