வேலைக்காரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இணையத்தில் நேரலையில் வெளியாகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் "வேலைக்காரன்". 


மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.


இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.



இந்த படத்தின் இசை வெளியீடு விழா இன்று நடைப்பெற உள்ளது. இதற்கான முகப்புத்தக நேரலை இணைப்பினை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.