இன்று `வேலைக்காரன்` டீசர் வெளியீடு!
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'.
ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் செப்டம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 'வேலைக்காரன்' டீசர் வெளியாக உள்ளது.