கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் விக்ரம் படத்தை முடித்து விட்டு வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் (kamal hassan) நடிப்பதை நடிகை ஸ்ரீப்ரியா தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். பாபநாசம் 2 ஆம் பாகத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு நேரம் இல்லை. விக்ரம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் அவர் நடிக்க உள்ளார் என்று ஸ்ரீப்ரியா கூறியுள்ளார். 


ALSO READ:இணையத்தில் வைரலாகும் சமந்தா - நயன்தாராவின் BTS புகைப்படங்கள்


தற்போது சூரி – விஜய் சேதுபதியை (Vijay Sethupathi) வைத்து விடுதலை படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பின் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றி மாறன் இயக்குகிறார். மேலும் இவர் விஜயை வைத்தும் ஒரு படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. விஜயை வைத்து வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக கொண்டது எனவும் கூறப்படுகிறது. 


இதற்கிடையில் அந்த படத்தை முடித்து விட்டு கமல்ஹாசன் படத்தை இயக்க இருக்கிறார். கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து வந்த இந்தியன் 2 படம் கோர்ட்டு வழக்கில் சிக்கியது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என கவனிக்கத்தக்க சிறந்த திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR