தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக போற்றப்படும் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் 'விடுதலை' படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.  இந்த படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.  எழுத்தாளர் ஜெயமோகன் கைவண்ணத்தில் உருவான 'துணைவன்' என்கிற நாவலை அடிப்படையாக வைத்து வெற்றிமாறன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.  சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது.  கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கும் மேலாக இப்படத்தின் பணிகளை வெற்றிமாறன் தீவிரமாக செய்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஓடிடியில் இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்!



இந்நிலையில் லேட்டஸ்டாக விடுதலை படம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, இயக்குனர் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், குறைந்த கால அளவில் படத்தை வெளியிட இயக்குனருக்கு மனமில்லை, அதனால் படத்தை விரிவாக எடுத்து இரண்டு பாகங்களாக வெளியிடவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்து விட்டது, இதில் சூரி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், இதற்கென்று அவர் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.  அடுத்ததாக விஜய் சேதுபதி குற்றவாளியாக நடித்துள்ளார்.  ஏற்கனவே இப்படத்தில் சூரி தான் ஹீரோ என்று வெற்றிமாறன் கூறிய நிலையில், தற்போது விஜய் சேதுபதியும் இப்படத்தில் மற்றொரு ஹீரோவாக இருக்கிறார்.



இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரிக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.  இந்த படம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.  ஆடுகளம், அசுரன் போன்று இந்த படமும் தேசிய விருதை அள்ளும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


மேலும் படிக்க | டான் ஹீரோயினுக்கு அடித்த ஜாக்பாட்! சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ