நடிகர் அஜித்தின் ஏகே 62 படம் குறித்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் அன்று மாஸ் அப்டேட் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. லைகா நிறுவனம். அஜித் துணிவு படம் வெளியானதும் தொடர்ந்து பைக் பயணத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால், எப்போது படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்காத நாளில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டு அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு அது நடக்காமல் போனது. எப்போதுமே அஜித் - விஜய் படங்கள் தான் போட்டி போட்டு கலெக்‌ஷன் அள்ளும். இதனால் விஜய் லியோ படத்தில் கேங்ஸ்டராக நடிப்பதால், அதே கதைக்களத்தை அஜித்தும் ஆசைப்பட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறினார்கள். அதோடு, துணிவு படத்தை விட கலெக்‌ஷனில் அசத்த வேண்டும் என்பதால், கதையை தேர்ந்தெடுப்பதில் மெனக்கொட்டார் அஜித். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வந்துவிட்டது ஏகே 62 அப்டேட்... மகிழ் திருமேனி இயக்கும் படத்திற்கு இதுதான் பெயர்!



அப்படி தான் தடம் படத்தின் மூலம் தமிழகமெங்கும் தடம் பதித்த இயக்குநர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தில் இணைந்தார். அஜித்துக்காக கதையை செதுக்கினார். ஒருவழியாக அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் கதை பிடித்துப்போக இப்போது அப்டேட் வெளியாகிவிட்டது. நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 62-வது படத்துக்கு  ‘விடாமுயற்சி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்றும், அனிருத் இசையமைக்கிறார் என்றும் லைகா நிறுவனம் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


இந்த அறிவிப்பை அடுத்து விடா முயற்சி என்ற டைட்டிலை உழைப்பாளர் தினமான இன்று அஜித் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இதற்கு நடுவே ஏன் அஜித் தொடர்ந்து வி என்ற எழுத்தில் தொடங்கும் எழுத்துக்களில் படத்தின் பெயரை தேர்வு செய்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  வி என்ற எழுத்து அஜித்துக்கு இதுவரை வெற்றியை மட்டுமே தந்துள்ளது. அஜித் வி என்ற எழுத்தில் முதலில் நடித்தது வான்மதி படம் தான். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. அடுத்தது அஜித்தின் வாழ்க்கையையே திருப்பிப்போட்ட ஒரு படம் குறித்தும் பேசியாக வேண்டும். ஆம், வாலி படம் தான் அது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் ரோலிலும் அவரே மிரட்டி இருப்பார். இந்தப்படத்துக்குப் பிறகு அஜித்தின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டது. அடுத்து 2002-ம் ஆண்டு வில்லன் படம் வெளியானது. இதிலும் இரட்டை வேடம் தான் ஏற்றிருந்தார் அஜித். இந்தப்படமும் பிளாக் பஸ்டர். 


அடுத்து வரலாறு படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்திருப்பார். வி வரிசையில் வெளியான வரலாறு படமும் அஜித்துக்கு பெஸ்ட் நடிகர் அந்தஸ்தை பெற்றுத்தந்தது. அதன்பிறகு 2014-ம் ஆண்டு மீண்டும் வி என்ற எழுத்தில் வீரம் படம் வெளியானது. கிட்டதட்ட 8 ஆண்டுகள் கழித்து வி என்ற எழுத்தின் தொடங்கும் படத்தின் பெயரில் நடித்து 100 கோடி ரூபாய் கலெக்‌ஷனை எட்டினார். அடுத்தடுத்து வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை என வி என்ற எழுத்தில் ஹிட் படங்களை கொடுத்தார். இதில் விவேகம் மட்டும் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  சமீப காலமாகவே அஜித் உழைப்பை மையப்படுத்தும் பெயர்களையே படங்களுக்கு தேர்வு செய்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது விடா முயற்சியும் இணைந்துள்ளது. உழைப்பு, உயர்வு, வியர்வை என சினிமாவில் விடா முயற்சி செய்யும் அஜித்தின் அவரது அடுத்த பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


மேலும் படிக்க | இவ்வளவு சீக்கிரம் ஓடிடியில் வெளியாகிறதா பொன்னியின் செல்வன் 2? ரிலீஸ் தேதி இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ