வித்யா நம்பர் 1: வெளிவரும் உண்மைகள்... வேதாவுக்கு சவால் விட்டு வெளியேறும் வித்யா - பரபர ட்விஸ்ட்!
Vidhya No.1 Serial Updates: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான `வித்யா நம்பர் 1` தொடரில், வரும் நாள்களில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
Vidhya No.1 Serial Updates: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர், 'வித்யா நம்பர் 1'. இந்த தொடர், கடந்த மே 1ஆம் தேதி முதல் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் இந்த சீரியலில் ப்ரீத்தி மற்றும் சகுந்தலாவின் சூழ்ச்சியால் மாணிக்கம் வேதாவின் வீட்டுக்குள் நுழைந்தான். இப்படியான நிலையால் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.
மாறுவேடத்தில் மாணிக்கம்
அதாவது, தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு விமர்சையாக நடைபெறுகிறது. மாணிக்கம் தன் மகளைக் காண மாறுவேடத்தில் வீட்டுக்குள் அலைய இதை அறியும் சந்திரமோகனும் விஜய்யும் மாணிக்கத்தை சமாளிக்க முயல்கின்றனர்.
மேலும் படிக்க | பத்திரிகை சுதந்திர தினம்..பத்திரிகையாளர்களாக கலக்கிய நடிகர்களும் அவர்களது படங்களும்
இந்த நிலையில் சகுந்தலாவின் ஆள் வேதாவிடம், மாணிக்கம் வீட்டில் தான் இருக்கிறான் என்பதை தெரிவிக்க வேதா அனைவரையும் கடுமையாக சோதனை செய்கிறாள். சந்திரமோகன் நிலைமையை சமாளிக்க மாணிக்கத்தை ஒரு குடோனில் அடைத்து வைக்கிறான்.
உண்மையை உடைக்கும் வித்யா
அதற்கு அடுத்து திருமணத்திற்கு பின் நடக்கும் மாப்பிள்ளை பெண் விளையாட்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்க மாணிக்கம் குடோனில் இருந்து தப்பித்து வெளியே வருகிறான். வேதா அனைவரது முன்னிலையில் குடும்பத்தின் மொத்த நிர்வாக பொறுப்பையும் வித்யாவிடம் அளிப்பதாக கூறுகையில் மாணிக்கம் கத்தியுடன் வந்து நிற்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு வேதாவின் ஆட்கள் மாணிக்கத்தை அடிக்க வித்யா அவர்களை தடுத்து நிறுத்துகிறாள்.
அடுத்தது என்ன?
மேலும் வித்யா, 'நான் வாணி இல்லை, வித்யா' என்கிற உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். வேதா பெரும் அதிர்ச்சியாகி அவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். வாக்குவாதம் முற்றிப்போக சஞ்சய் வாய் தவறி, 'உன் தராதரம் தெரியாமல் வாழ்க்கை கொடுத்தது தவறாகிவிட்டது' என்று பேச வித்யா மனம் உடைந்து போய் அந்தஸ்தில் இதே அளவு உயர்ந்து காட்டுவதாக சவால் விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? வேதா வித்யாவை ஏற்பாளா? வித்யா அடுத்து என்ன செய்ய போகிறாள் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே வித்யா நம்பர் 1 சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மறக்காமல் கண்டுகளியுங்கள்.
மேலும் படிக்க | தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழ்நாட்டில் தடையா... உளவுத்துறை கொடுத்த அலர்ட் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ