இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் வித்யா பாலன்!
India`s Most Powerful Prime Minister` என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ் "Indira: India's Most Powerful Prime Minister" என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்த நூலினை திரைப்படம் ஆக தயாரிப்பதற்கான உரிமையை ராய் கபூர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சகாரிகா கோஷிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை சகாரிகா கோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.