காதலி நயன்தாராவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வந்த நானும் ரௌடி தான் படத்தை இயக்கினார். இப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இடையே காதல் ஏற்பட்டது. 


இந்நிலையில், விக்னேஷ் சிவன் நேற்று தனது 33-வது பிறந்தநாளை நியூயார்க்கில் கொண்டாடினார். அமெரிக்காவில் சுற்றுலா சென்றுள்ள இவர்கள் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். 


இவர்கள் இருவரும் நியூயார்க்கில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாக பரவி வருகின்றது. 


இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் நியூயார்க்கில் இருக்கும் புகைப்படங்கள் தனது டிவிட்டர் பகத்தில் ஷேர் செய்துள்ளார்.