சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திட்டமிடபட்டுள்ள விஜய் 65 படத்துலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) விலகிய பின்னர், சன் பிக்சர்ஸ், இப்படத்தை இயக்கும் பொறுப்பை பேரரசுவுக்கு அளிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பாச்சி மற்றும் சிவகாசி (இரண்டும் 2005) போன்ற பிளாக்பஸ்டர் விஜய் படங்களை இயக்கிய பேரரசு, விஜய் 65-ஐயும் இயக்கக்கூடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு முன்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநராக இறுதி செய்யப்பட்டிருந்தார். ஆனல், ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேறினார்.


சன் பிக்சர்சால் முருகதாஸ் கோரிய சம்பளத்தை வழங்க முடியவில்லை என்றும் அதனால் அவர் இப்படத்திலிருந்து விலகிக்கொண்டார் என்றும் தெரிய வந்துள்ளது. விஜய் 65 ஐ (Vijay 65) இயக்குவதற்கு மகிழ் திருமேனி, ஹரி, மோகன் ராஜா போன்ற இயக்குநர்களுக்கு இடையே போட்டி இருந்தது. எனினும், பேரரசின் கதைக்களம், இந்த தருணத்தில் விஜய்க்கான சரியான ஒன்றாக கருதப்பட்டதால், அவரே இப்படத்தின் இயக்குநராக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.


ALSO READ:நடிகர் கார்த்தியின் சுல்தான்....வெளியாகி வைரலாகும் பர்ஸ்ட் லுக்


இதைத் தோடர்ந்து மகிழ் திருமேனி உதயநிதியின் படத்தை இயக்குவதில் பிசியாகி விட்டார். மோகன் ராஜாவும் தனி ஒருவன் 2 படத்தின் ப்ரி-ப்ரொடக்ஷன் வேலைகளில் இறங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  


இருப்பினும், விஜய் 65 ஐப் பொறுத்த வரை, விஜய் (Vijay) இப்போது படப்பிடிப்புக்கு எந்த அவசரமும் காட்டவில்லை என்றும், படப்பிடிப்பு 2021 பிப்ரவரியில்தான் துவக்கப்படும் என்றும் தெரிகிறது.


இன்னும் சிலரிடம் விஜய் 65-க்கான கதைகளை விஜய் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் முடிந்து, விஜய் 65 படத்தை பேரரசுதான் (Perarasu) இயக்கவுள்ளாரா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: ஜீவா & அருள்நீதி சேர்ந்து நடிக்கும் 'களத்தில் சந்திப்போம்' படத்தின் டீசர்..!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR