நடிகர் விஜய் தான் நடித்துள்ள பீஸ்ட் படத்தையடுத்து தனது 66ஆவது படத்துக்கான பணிகளில் வேகம் காட்டிவருகிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். நடிகர் கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தை இயக்கிய அவர், செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விஜய்யின் இப்படத்தை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கில் இது உருவாகவுள்ளதால் தெலுங்கில் விஜய் நடிக்கும் முதல் படம் எனும் சிறப்பையும் இப்படம் பெறவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படப்பிடிப்புக்காக சென்னை இசிஆரில் பிரமாண்ட செட்டுகளும் போடப்பட்டுள்ள நிலையில் இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளன. இதனிடையே, இப்படத்துக்கான விஜய்யின் டெஸ்ட் ஷூட்டிங் நடந்துமுடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெஜ்டே நடித்துள்ள நிலையில் விஜய் 66வில் நடிக்கப்போகும் நடிகை யார் எனும் கேள்வி கடந்த சில வாரங்களாக சினிமா வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. விஜய்யின் முந்தைய சில படங்களிலேயே அவரது பெயர் அடிபட்டுவந்தது. இந்த நிலையில்தான் விஜய் 66இல் அவர் இணைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


                                                              


மேலும் படிக்க | நான் இவரைதான் கல்யாணம் பண்ணிப்பேன் : ரஷ்மிகா ஓபன் டாக்


ரஷ்மிகா, தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் நல்ல கவனம் பெற்ற நடிகையாக தற்போது மாறியுள்ளார். சமீபத்தில் வெளியான புஷ்பா படமும் அவருக்கு நல்ல கவனத்தைப் பெற்றுத் தந்தது. இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே ரஷ்மிகா தவிர வேறு நடிகையும் இதில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் பட்டியலில் தமன்னா, க்ரீத்தி சனோன், திஷா பதானி எனப் பலரது பெயர்கள் அடிபட்டுவருகின்றன.


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ படத்துக்கு அரசு திடீர் தடை! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR