எப்போது நல்ல செய்தி சொல்லப்போகிறீர்கள் அண்ணா?... வைரலாகும் விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள்

அரசியல் கட்சி தொடங்குகிறார் தளபதி விஜய் என்ற வாசகத்தை அச்சிட்டு போஸ்டர் ஒட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த விஜய் மக்கள் இயக்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கார்த்தியை வைத்து தோழா, மகேஷ் பாபுவை வைத்து மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் வம்சி.
அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இதற்கிடையில், இப்படத்தின் டைடில் "வாரிசு" என்ற அறிவிப்பு வெளியாகி, அதனுடன் அவரது போஸ்டரும் வெளியானது. விஜய்யின் புதிய கோட் சூட் புகைப்படத்தை ரசிகர்கள் வைரல் ஆக்கி மகிழ்ந்தனர்.
பின்னர் அவரது புகைப்படத்தை "ஓட்டோ" விளம்பர புகைப்படத்தோடு ஒப்பிட்டு சிலர் பதிவிட்டும் வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் என அனைத்திலும் விஜய் சம்பந்தப்பட்ட பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இன்று நடிகர் விஜய் தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகர் மன்றத்தினர் பல்வேறு வகையில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி சார்பில் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "அரசியல் கட்சி தொடங்குகிறாரா தளபதி விஜய்? இந்த நல்ல நாளில் கேட்கிறோம் அண்ணா எப்பொழுது இந்த நல்ல செய்தி எங்கள் காதுகளில் ஒலிக்கும்?, தடுக்கி விழுந்த தமிழ் சினிமாவை காப்பாற்றினீர்கள்..., எப்போது தமிழக மக்களாகிய எங்களை காப்பாற்ற போகின்றீர்கள்?, உங்கள் அரசியல் வருகைக்காக காத்திருக்கிறோம் என பல்வேறு வசனங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
ரசிகர்களின் இந்த போஸ்டர்கள் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR