தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் முடுக்கிவிட்டுள்ளன. இதுதொடர்பான அனைத்துக் கட்சி கூட்டமும் சென்னையில் நடைபெறுகிறது. ஜனவரி 24 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வர இருப்பதால், அதற்கு முன்கூட்டியே ஜனவரி 22 ஆம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட மாநில தேரதல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ |  திரையரங்குகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்த மாஸ்டர்!


இந்நிலையில், இந்த தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டனர். அதில் 120 பேர் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்றனர். அவர்கள் அனைவரும் நடிகர் விஜயை சந்தித்து நேரிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


ALSO READ | ஜெய்ப்பூரில் மீண்டும் BEAST சூட்டிங்..! விஜய் பங்கேற்பா?


இந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் இதனை உற்று நோக்கிய நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட தயராகி வருகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் என்பதால், கிராம பகுதியைக் காட்டிலும் நகரப்பகுதிகளில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அதிகமானோர் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இதற்கிடையே, கொரோனா பரவலுக்கு இடையே நகரபுற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. அதனால், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறுமா? என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR