கோலிவுட் சினிமாவில் டாப் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய்யுடன் லியோ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே மெகாஹிட் அடித்திருப்பதால், லோகேஷ் இயக்கத்தில் நடிக்க அனைத்து முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கொடுத்த தயாராக இருக்கின்றனர். ஆனால், இப்போதைக்கு அவருக்கு தான் நேரமில்லை. பிஸியாக லியோ சூட்டிங்கில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என கோலிவுட் டிராக்கர்கள் தோண்டி துருவிக் கொண்டிருந்தனர். அப்போது கசிந்த தகவல் தான், ரஜினிகாந்துடன் அவர் கூட்டணி சேர இருப்பது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


விக்ரம் படம் வெற்றியின்போது லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போதே அவருடன் இணைந்து லோகேஷ் பணியாற்றுவதற்கான காலம் நெருங்கிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் லியோ படத்துக்குப் பிறகு புதிய படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் லோகேஷை அழைத்து தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு லோகேஷ் கனகராஜூம் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் விஜய் இருக்கிறாரா? என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.


மேலும் படிக்க | லிப் லாக் சர்ச்சை குறித்து ஓப்பனாக பேசிய அனிகா சுரேந்திரன்!


ஏனென்றால், விஜய்யுடன் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது தான் ஜெய்லர் படத்திற்கான வாய்ப்பு அவரை தேடிச் சென்றது. இது குறித்து நெல்சன் திலீப்குமார் ஒரு பேட்டியில் கூட சொல்லியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கதை ஒன்றை தயார் செய் என வாய்ப்பு வரும் என விஜய் சொல்லியபிறகே, நெல்சன் திலீப்குமாரை அவர் அழைத்திருக்கிறார். அதனைப் போலவே, லியோ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ரஜினிகாந்தை லோகேஷ் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், இந்த இரண்டு விஷயங்களையும் விஜய் ரசிகர்கள் முடிச்சுப்போட்டுள்ளனர். ஆனால் இந்த தகவல் உண்மையா? என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும். 


மேலும் படிக்க | இனிமே நாங்க தான், ரசிகர்கள் கொண்டாட்டம்.. ‘மாவீரன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் வெளியானது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ