கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். அந்தப் படம் ஹிட்டடித்ததை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்தப் படம் நூறு கோடி ரூபாய் வசூலித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் விஜய்யை வைத்து நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கினார். சிவகார்த்திகேயனுக்கு ஹிட் கொடுத்தது போல் விஜய்க்கும்  ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து படத்துக்கு சென்றனர்.



ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. விஜய் என்ற ஸ்டார் நடிகரை மட்டும் நம்பி கதையிலும், திரைக்கதையிலும் சொதப்பிவிட்டார் என நெல்சன் திலீப்குமார் மீது கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்துவருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய்யை வைத்து படம் எடுக்க எவ்வளவோ இயக்குநர்கள் காத்திருக்க நெல்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீண்டித்துவிட்டார் எனவும் விமர்சிக்கின்றனர்.


மேலும், பீஸ்ட் ரிசல்ட்டை பார்த்த சன் பிக்சர்ஸ் ரஜினி - நெல்சன் படத்தை தொடங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் தொடர் விமர்சனங்களால் கடும் நெருக்கடியில் இருக்கிறார் நெல்சன் திலீப்குமார் என கூறப்படுகிறது.



இந்நிலையில் நெல்சனை தொலைபேசியில் அழைத்த விஜய் ரசிகர்களின் விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றலாம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட விஜய்யின் ரசிகர்கள் ஒரு தரப்பினர் தளபதிக்கு எதற்காக இந்த ரிஸ்க் என சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.


மேலும் படிக்க | நண்பரின் கனவை நனவாக்கும் செல் முருகன் - விவேக் நினைவு நாளில் தொடங்கப்பட்ட திட்டம்


அதேசமயம் படம் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை என்றாலும் இளம் இயக்குநர் நெருக்கடியில் இருக்கும்போது உதவுவதுதான் அழகு. அந்த வகையில் விஜய் அதை மீண்டும் செய்திருக்கிறார் என விஜய் ரசிகர்களில் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். ஏற்கனவே அழகிய தமிழ் மகன் படம் தோல்வி அடைந்தாலும் அவருக்கு உதவும் விதமாக மீண்டும் பைரவா படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் பரதனுக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | நெல்சன் வேண்டுமா வேண்டாமா... ரஜினியை முடிவெடுக்க சொன்ன சன் பிக்சர்ஸ்?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!