கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பலத்த மழை கொட்டியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாகர்கோவில், அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளிலும் மழை (TN Rain) வெள்ளத்தால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்கியது. இதேபோல் டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம், தென் மண்டலம் என அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.


தொடர் மழையால் பல மாவட்டங்களில் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர். இதேபோல் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினரும் (Vijay Makkal Iyakkam) பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.


ALSO READ நடிகர் விஜய்யின் அனுமன்: புஸ்ஸி ஆனந்த்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தில் 65 கலைக்கூத்தாடி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் அண்மையில் பெய்த தொடர் மழையால் கலைக்கூத்தாடிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு போதிய உணவு வசதி இல்லாமல் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.




இந்த நிலையில் நடிகர் விஜயின் இருபத்தி ஒன்பதாவது ஆண்டு கலையுலக பயணத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பரணிபாலாஜி தலைமையில் அந்த அமைப்பினர் வெள்ளையூரில் உள்ள 65 கலைக்கூத்தாடி குடும்பத்திற்கு தேவையான ஒரு மூட்டை அரிசி ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியவற்றை அடங்கிய சிறப்பு தொகுப்பை வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


ALSO READ அதிமுகவின் கோரிக்கையை ஏற்பதாக தமிழக அரசு உறுதி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR