ஆஸ்கார் வென்ற படத்தின் மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு?
பாரசைட் படம் மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது.
பாரசைட் படம் மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளிவந்த ஆஸ்கார் வென்ற படம் Parasite. இப்படம் கொரியன் மொழியில் எடுக்க பட்ட படம் ஆகும். தற்போது இந்த படம் தமிழில் விஜய் நடிப்பில் வந்த மின்சார கண்ணா படத்தின் காப்பி போல் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டபோது, அப்படியொரு கதையை 20 வருடங்களுக்கு முன்பே நான் தேர்வு செய்ததை நினைத்து மகிழ்கிறேன். இந்த பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என தயாரிப்பாளர் தேனப்பன் கூறினார்.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் பேசிய போது "இந்த பிரச்சனை வெளிநாட்டு விவகாரம் என்பதினால் இதற்கு அதற்குரிய வழக்கறிஞரை வைத்து தான் பேசவேண்டும். மேலும் இதனை குறித்து எனது முடிவை விரைவில் நான் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.