ராகவா லாரன்ஸ் பாதையில் விஜய் சேதுபதி! கை கொடுக்குமா திகில்
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி லீட் ரோலில் நடிக்கும் திரைப்படம் திகில் படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் ஹெச். வினோத் கூட்டணி, ஏகே 61 படத்துக்குப் பிறகு அமைய இருக்கிறது. நடிகர் அஜித்குமாருடன் தொடர்ச்சியாக 3 படங்களில் பணியாற்றிய ஹெச்.வினோத், விஜய் சேதுபதியிடம் வித்தியாசமான கதை ஒன்றை கூறியிருக்கிறார். சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளில் நடிக்க தயாராக இருக்கும் விஜய் சேதுபதிக்கும் இந்தக் கதை பிடித்துவிட்டதால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இதனையடுத்து படத்திற்கான அடுத்தக்கட்ட பணிகள் ஏகே 61 படத்திற்கு பிறகு தொடங்க இயக்குநர் வினோத் முடிவெடுத்துள்ளார். இப்போது அஜித்குமாரின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அவர், அந்தப் படத்தின் பணிகளை விரைவாக முடித்தவுடன், விஜய் சேதுபதி படத்துக்கான பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார்.
மேலும் படிக்க | அஜித் இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி
வில்லன் ரோலில் நடித்து பிரபலமடைந்துவிட்டதால், பலரும் நெகடிவ் கதாப்பாத்திரங்களில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகுகின்றனர். ஆனால், அவர் இப்போது மீண்டும் கதாநாயகன் ரோலில் நடிக்க விரும்புகிறாராம். அண்மைக்காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் லீட் ரோல் படங்கள் பெரிய அளவில் பேசப்படாததால், தனக்கு முக்கியத்துவம் மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெறும் என உறுதியாக நம்பும் படங்கள் மீது மட்டும் கவனம் செலுத்த விஜய் சேதுபதி திட்டமிட்டிருக்கிறாராம். இப்படியே நடித்தால், வில்லன் முத்திரை குத்தப்பட்டுவிடும் என்பதால், நல்ல கதையம்சம் கொண்ட கதையையும் இதன் தொடர்ச்சியாகவே தேடியிருக்கிறார்.
பலர் கதை கூறியிருந்தாலும், ஹெச். வினோத் கூறிய கதை மிகவும் பிடித்துவிட்டதாம். திகில் பின்னணியைக் கொண்ட படம் என்பதால் உடனே ஒகே சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழில் திகில் படங்கள் என்றாலே ராகவா லாரன்ஸை நினைக்கும் அளவுக்கு, காஞ்சனா சீரீஸ் படங்கள் அவருக்கு பெரும் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. அந்த வரிசையில் திகில் படத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவரின் இந்த முடிவு கை கொடுக்குமா? என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
மேலும் படிக்க | இன்று ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ