மெல்போர்னில் நடைபெற்ற இந்தியன் பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டின் துவக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் திருநங்கையாக நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார் விஜய் சேதுபதி. 


இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கவே வாய்ப்புள்ளது என்று பலரும் பாராட்டினார்கள்.
 
இதனிடையே இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பலதரப்பு மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தற்போது மெல்பார்னில் நடைபெறும் இந்தியன் பிலிம் பெஸ்டிவலில் கலந்துகொண்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக் விஜய் சேதுபதி, காயத்ரி, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததற்காக இந்த விழாவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றிருக்கிறது.


இது சர்வதேச அளவில் விஜய் சேதுபதி வாங்கும் முதல் விருதாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதியை வாழ்த்தி பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத் தமிழன்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்த நிலையில், தற்போது துக்ளக் தர்பார், முரளிதரனின் பயோபிக், மாமனிதன், லாபம், கடைசி விவசாயி எனப் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.