நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா அக்கினேனி நடிப்பில் வெளியாகவுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் செட்டில் இருந்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், விஜய் சேதுபதி, சம்ந்தா மற்றும் நயன்தாரா ஒரு பேருந்தின் படிகளின் நின்று பயணிப்பதைக் காண முடிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1988 ஆம் ஆண்டு வெளியான சத்யா திரைப்படத்தின் 'வளையோசை' என்ற பிரபல பாடல் படம்பிடிக்கப்பட்ட அதே முறையில் இந்த படத்தின் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது. 


வெள்ளை வண்ணத்தில் மலர்கள் கொட்டிக்கிடப்பது போன்ற அழகிய சேலைகளில் இருக்கும் சமந்தாவையும் நயன்தாராவையும் பார்க்க 'வளையோசை' பாடலில் அமலாவைப் பார்ப்பது போலவே உள்ளது. 



அதேபோல், நடிகர் கமல்ஹாசனின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வெள்ளை சட்டை, கருப்பு ஃபார்மல் பேண்ட் மற்றும் கருப்பு டை அணிந்துள்ளார். 'வளையோசை' பாடலைப் போலவே, இந்த காட்சியும் நகரும் பேருந்தில் படமாக்கப்பட்டது. 


சத்யா படத்தில், லதா மங்கேஷ்கர் மற்றும் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய, 'வளையோசை' என்ற அந்த பிரபலமான பாடலை யாராலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ:இணையத்தில் வைரலாகும் சமந்தா - நயன்தாராவின் BTS புகைப்படங்கள்


இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை, ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் பேனர்களில் விக்னேஷ் சிவன், நயன்தாரா (Nayanthara) மற்றும் லலித் குமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். முன்னதாக, சமந்தா தனது சக நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட மற்றொரு புகைப்படத்தை படப்பிடிப்பில் இருந்து பகிர்ந்தார். 


அமேசான் பிரைம் வீடியோவின் ஹிட் வெப் சீரிசான, 'தி ஃபேமிலி மேன் 2'-ல் நடித்த சமந்தா (Samantha Akkineni), சமீபத்தில், மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாவில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகைக்கான (Best Performance Female (series)) விருதைப் பெற்றார். அந்த விருது பெற்ற மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையிலும் சமந்தா பல படங்களைப் பகிர்ந்துள்ளார்.


தொடர்ச்சியாக பல புகைப்படங்களைப் பகிர்ந்து, அதற்கு 'the week that was' என பெயரிட்ட சமந்தா, கடந்த வாரத்தில் கிளிக் செய்யப்பட்ட பல புகைப்படங்களைப் பகிர்ந்தார். அதில் ஒன்று 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படமாகும். இயக்குனர் விக்னேஷ் சிவனும் தனது வருங்கால மனைவியான நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் காணப்படுகிறார். புகைப்படத் தொகுப்பில்,  சமந்தாவின் சமீபத்திய விருதை கொண்டாடும் வகையில் கேக் வெட்டப்பட்டதைக் குறிக்கும் ஒரு புகைப்படத்தையும் காண முடிகிறது.



சமந்தா 'ஃபாமிலி மேன்' படம் மூலம் OTT தளத்தில் அறிமுகமானார். ராஜியின் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். இந்த தொடர் பல நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும், ஈழப் போராட்டத்தின் சில அம்சங்களை தவறாக சித்தரித்ததற்காக தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினரால் அது விமர்சிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி ஸ்ட்ரீமிங் தொடங்கிய இந்த வலைத் தொடரில், மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


ALSO READ: தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR