விஜய் சேதுபதியின் ரியல் ’ஜானு’ குறித்த சுவாரஸ்ய தகவல்
நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக தன்னுடைய பள்ளி பருவ ஜானு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படம் வசூலை ரீதியாக என்பதைக் கடந்து உணர்வு ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பலரும் தங்களின் பள்ளி மற்றும் கல்லூரி கால காதலை எண்ணி மனதுருகினர். பசுமை எண்ணங்களையும், கசப்பான வலிகளையும் ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றது அந்தப் படம். விஜய் சேதுபதியும், திரிஷாவும் கதாப்பாத்திரமாக வாழ்ந்து, பள்ளிப் பருவ காதல் மூலம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டனர். இந்த கதை விஜய் சேதுபதிக்கும் மிகவும் பிடித்தமான கதை. அவர் பள்ளியில் படிக்கும்போது காதலித்த காதலியின் பெயர் ஜானுவாம்.
மேலும் படிக்க | சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அஜித்? வெளியான சஸ்பென்ஸ்
4 ஆண்டுகள் அவரை காதலித்துள்ளார். இந்த சுவாரஸ்ய தகவலை அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, " நான் ஜானு என்கிற பெண் பின்னால் சுமார் 4 ஆண்டுகள் சுற்றினேன். ஆனால், அந்தப் பெண்ணுக்கு இது கடைசி வரை எரியாது. இப்போதும் கூட அது தெரியாமல் இருக்கலாம். அதன்பின் பல நாட்கள் அவரைப் பார்க்கவே இல்லை. திருமணத்திற்கு முன்பு ஒருநாள் என் தந்தையுடன் செல்லும்போது, அந்த பெண் மாதிரி ஒரு பெண் நடந்து போனாங்க. உடனே வண்டியை திருப்பினேன். என் தந்தை யார் என கேட்க, நான் சைட் அடிச்ச பெண் போகுதுன்னு நினைக்கிறேன்.. பாத்துட்டு போயிடலாம்னு சொன்னேன். அதன்பின்னர் அவரை மீண்டும் பார்க்கவில்லை.
திரும்ப பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன். எப்போது அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்தாலும், அப்படி ஸ்கூல் யூனிஃபார்மில் வர இமேஜ் தான் கண்ணுக்குள் வரும். அது மிகவும் அழகான விஷயம். அது அப்படியே இருக்கட்டும் என உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய் சேதுபதியின் பேச்சு உண்மையாகவும், மனதுக்கு நெருக்கமாக இருப்பதாக கூறும் ரசிகர்கள், தங்களின் ஜானுவையும் நினைத்து நினைத்து உருகத் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | ஏகே அஜித் என்ட்ரி.... திருவிழாக்கோலம் ஆன திருச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ