நடிகர் விஜய் சேதுபதியின் உப்பேனா திரைப்பட போஸ்டர் வெளியானது...
சிரஞ்சீவியின் சாய் ரா நரசிம்ம ரெட்டி மூலம் டோலிவுட்டில் அறிமுகமான பிறகு, விஜய் சேதுபதி தனது வரவிருக்கும் தெலுங்கு படமான உப்பேனா குறித்து ஆர்வமாக உள்ளார். புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ள இப்படம் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்சா வைஷ்ணவ் தேஜின் அறிமுக படமாக உருவாகி வருகிறது.
சிரஞ்சீவியின் சாய் ரா நரசிம்ம ரெட்டி மூலம் டோலிவுட்டில் அறிமுகமான பிறகு, விஜய் சேதுபதி தனது வரவிருக்கும் தெலுங்கு படமான உப்பேனா குறித்து ஆர்வமாக உள்ளார். புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ள இப்படம் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்சா வைஷ்ணவ் தேஜின் அறிமுக படமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் இன்று படக்குழுவினர் உப்பேனா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றத்தை வெளிப்படுத்தினர். மேலும் அவர்களது அறிவிப்பு படி படத்தில் விஜய் சேதுபதியில் பெயர் ராயனம் என்று இருக்கலாம் என தெரிகிறது. முன்னர் அறிவித்தபடி, அவர் படத்தில் பஞ்சா வைஷ்ணவ் தேஜுக்கு வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது.
இன்று வெளியிடப்பட்ட புதிய போஸ்டரில் விஜய் சேதுபதி ஒரு காட்டன் சட்டை மற்றும் வெற்று வெள்ளை தோதி அணிந்திருப்பதைக் காணலாம். மேலும் அவர் புகைப்படத்தில் சிகரெட் புகைப்பதையும் நாம் பார்க்கலாம்.
புஜ்ஜி பாபு சனாவின் உப்பேனா 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துவங்கியது, எனினும் படம் இடையில் பல மாற்றங்களைச் சந்தித்தது. மேலும் கடந்த ஆண்டு, தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டதால் விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் போஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியில் இருப்பை உறுதி செய்துள்ளது.
சாய் ரா நரசிம்ம ரெட்டியில் விஜய் சேதுபதி ஒரு கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார், எனினும் அவர் ஒரு தெலுங்கு படத்தில் முதன்முறையாக ஒரு முழு வேடத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உப்பேனா அவரது முழு வேட தெலுங்கு திரைப்படமாக பாவிக்கப்படுகிறது.
கிராமப்புற பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. வைஷ்ணவ் தேஜின் ஜோடியாக புதுமுகம் கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றார். உப்பேனாவின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷம்தத் சைனுதீன் ஆகியோர் இணைந்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.