அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி (Taapsee Pannu) பன்னு ஒரு முழு நகைச்சுவை படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் (Vijay Sethupathi) ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர்களுடன்  ராதிகா, யோகி பாபு போன்றோர் நடிக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி, ராதிகா உள்ளிட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்கள். டாப்ஸி நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி குடும்பத்தோடு ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.


 


ALSO READ | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி உள்ளாரா? உண்மை என்ன?


இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பெயர் என்னவென்பது தெரியவந்துள்ளது. இந்த படத்துக்கு அனபெல் சுப்ரமண்யம் (Annabelle Subramaniam) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


சமீபத்திய தகவல்களின்படி, டாப்ஸி அனபெல் என்ற அதிநவீன நகரப் பெண்ணாகவும், மக்கள் செல்வன் சுப்பிரமணியமாகவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காத்திருக்கிறது.


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 

Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR 


ALSO READ | OTT இல் தனது படம் வெளியாவதை நினைத்து விஜய் சேதுபதி வருத்தமா?