புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி?
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் புஷ்பா 2 திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பாக்ஸ் ஆஃபீஸில் நெருப்பை பற்ற வைத்த திரைப்படம் என்றால் அது ’புஷ்பா’ தான். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் கலெக்ஷனை வாரிக் குவித்தது. சுமார் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த இந்த திரைபடம் ஓடிடியிலும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
மேலும் படிக்க | மீனாவுக்குத் தூணாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் யார் தெரியுமா?
கதை ஏற்கனவே தயாராக இருப்பதால், முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பகத்பாசில், மைம்கோபி உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்தில் இருப்பார்களா? என தெரியவில்லை. விஜய் சேதுபதி முதல் பாகத்திலேயே நடிக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால், அவருக்கு இருந்த கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். ஆனால், 2 ஆம் பாகத்தில் அவர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என இயக்குநர் விரும்புகிறாராம். அதனால், அவருடைய கால்ஷீட்டுக்கு ஏற்ப பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள படக்குழு, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்களாம்.
புஷ்பா 2 படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் பாகம் எதிர்பார்க்காத ஹிட்டைக் கொடுத்திருப்பதால், இந்த முறை அந்த வசூலை முறியடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ள படக்குழு அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறார்களாம். இந்தியிலும் அதிக வசூலை படம் ஈட்டியிருப்பதால், படத்தில் இந்தி நடிகர் ஒருவரையும் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது. முதல் பாகத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத், 2ம் பாகத்துக்கும் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மாதவன் அனுப்பிய புகைப்படத்தால் கடுப்பான அவரது மச்சான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR