பேட்ட-யை தொடர்ந்து தெலுங்கில் களமிறங்கிய விஜய் சேதுபதி...!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, 'சயீரா நரசிம்ம ரெட்டி' என்னும் வரலாற்றுப் படத்தில் களமிறங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படமான பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியானது. இதையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் பிசியாகி வருகிறார். தற்போது, விஜய் சேதுபதி அடிப்பில் உருவான 96 மற்றும் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘ஆரண்யக் காண்டம்’ திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முறையாக திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் First Look வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதை தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, 'சயீரா நரசிம்ம ரெட்டி' என்னும் வரலாற்றுப் படத்தில் நடித்துவருகிறார். டோலிவுட்டின் பிரமாண்டமான வரலாற்றுப் படமாகக் கருதப்படும் இப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ' சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஜார்ஜியாவில் நடந்துவரும் படப்பிடிப்பில், விஜய்சேதுபதியும் கிச்சா சுதீப்பும் சமீபத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும், அவர்களது கெட்டப்பிலிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. சிரஞ்சீவி - நயன்தாரா திருமணக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள், டீசர் ஆகியவை ஏற்கெனவே வைரலானது. ராஜா நர்சிம்ம ரெட்டியின் `விசுவாசி ஓபயா' எனும் கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜய்சேதுபதி, தமிழ் பேசி நடிப்பதும் குறிப்பிடத்தக்கது...!