நடிகர் அஜித்குமாரின் 51வது பிறந்நாள் மே 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர் தினத்தன்று கொண்டாடப்படும் அவரது பிறந்தநாளை வழக்கம்போல் இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாக உள்ளனர். இதேபோல் , தமிழின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளும், அந்த நாளில் அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட உள்ளன. இதில் முந்திக் கொண்டது ஜீ தமிழ் தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பாலிவுட் படத்தை பதம்பார்த்த ராக்கிபாய் - வசூல் சாம்ராஜ்ஜியம்


அண்மையில் ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான ’வலிமை’ திரைப்படத்தை மே 1 ஆம் தேதி ஒளிபரப்புக்கிறது. படம் வெளியிடப்பட்டு சில மாதங்களிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதால், படத்தை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். நேர் கொண்ட பார்வை திரைப்படம் ரிலீஸாகி கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடினர்.



இதுவரை படத்தை பார்க்காதவர்கள் மே 1 ஆம் தேதி மாலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் படத்தை பார்க்கும் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆனால், ஜீ தமிழ் மட்டுமே பார்க்க தயாராக இருக்கும் ரசிகர்களுக்கு, ஸ்பெஷல் ஷோவை போட்டியாக களமிறக்குகிறது மற்றொரு முன்னணி தொலைகாட்சியான விஜய் டிவி. ரசிகர்கள் மற்றும் அஜித்துடன் நடித்தவர்களைக் கொண்டு ஸ்பெஷல் ஷோவை நடத்துகிறதாம். இதில் முன்னணி நடிகை ஒருவரும் பங்கேற்று, அஜித்துடன் நடித்தது குறித்து பேச இருக்கிறாராம். 


மேலும் படிக்க | கோப்ரா படத்துக்கு இப்போதே கிடைத்த அங்கீகாரம் - படக்குழு மகிழ்ச்சி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR