விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி தான், அதற்கு காரணம் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரி.  வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையின் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படையுடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு எந்த தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படாததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத ரசிகர்கள் பலரும் விஜய் என்ன பேசியிருப்பார் என்கிற குழப்பத்திலேயே இருந்து வந்தனர்.  இப்போது ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தளபதி விஜய் என்ன பேசினார் என்பது தெரியவந்துள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’சின்ன தம்பி படம் பார்க்க தோழியுடன் சென்றேன்’ வாரிசு விழாவில் ஓபனாக பேசிய விஜய்


தளபதி விஜய் இந்த முறை அரசியல் சார்ந்த விஷயங்கள் எதைப்பற்றியும் பேசவில்லை மற்றும் தீ தளபதி பாடலை தெறிக்க விட்டதற்காக நடிகர் சிம்புவிற்கு மனமார நன்றி கூறியுள்ளார்.  அதனை தொடர்ந்து தனது காந்த குரலால் ரஞ்சிதமே பாடலை பாடி ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் சில மோட்டிவேஷனல் ஸ்பீச்சை கொடுத்துள்ளார்.  விஜய் பேசுகையில், "1990 களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார், போக போக ஒரு சீரியசான போட்டியாளராக இருந்தார்.  அவரை தாண்ட வேண்டும் என நானும் போட்டி போட்டி ஓடினேன், அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய்.  ஜெயிக்க வேண்டும் என்ற போட்டியாளர் உங்களுக்குள் இருக்க வேண்டும், அது தான் உங்களை உயர்த்தும், நீங்கள் தான் உங்களுக்கான போட்டியாளர்.  தேவையான விமர்சனமும், தேவையற்ற எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும்" என்று பேசி தனது ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.



'வாரிசு' குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு கூறுகையில், "வாரிசு படம் ரீமேக் படமல்ல, இது ஒரு பக்காவான குடும்பங்கள் கொண்டாடும் தமிழ் படம்.  நடனம், பாடல், ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு அற்புதமான படம் இது.  இந்த பொங்கல் நம்முடையது" என்று பேசியுள்ளார்.  படத்தின் கதாநாயகி ராஷ்மிகா விஜய் குறித்து பேசுகையில், "என்னுடைய பேவரைட் & க்ரஷ் விஜய் சார் தான், என் அப்பாவுடன் சேர்ந்து 'கில்லி'  படத்தின் முதல் ஷோவை பார்த்தேன், அதிலிருந்து நான் விஜய் ரசிகையாக மாறிவிட்டேன்" என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | என் நெஞ்சில் குடியிருக்கும்... கூலான குட்டி கதை... செல்பி வீடியோ - விஜய்யின் முழு பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ