நாளை இளைய தளபதி விஜய்-யின் பிறந்தநாளை முன்னிட்டு எச்.டி.கட்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களின் மனதை கொள்ளை கொண்ட இளைய தளபதி விஜய் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ரசிகர்கள் தங்களுடைய கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர். 


ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாளானது தமிழகம் முழுவதும் திருவிழா போலக் காட்சியளிக்கும். எங்கே பார்த்தாலும் பேனர்கள், போஸ்டர்கள் எனப் பல ஏற்பாடுகளை ரசிகள் செய்வது வழக்கம். 


அதிலும், குறிப்பாக எல்லா ஆண்டும் மக்களுக்கான நலத்திட்டத்தைச் செயல்படுத்துவதை ரசிகர்கள் கடமையாக கொண்டுள்ளனர். இப்படி எல்லா ஆண்டும் சிறப்பாக கொண்டாடி விஜய்க்கு சர்பிரைஸ் கொடுக்கும் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு புதிதாக விஜய் சர்பிரைஸ் கொடுப்பார்கள். 


அப்படி, விஜய்-க்கு சர்பிரைஸ் கொடுத்து எச்.டி.கட்ஸ் வெளியிட்டுள்ள ஒரு மேஷ் அப் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோவினை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.