விஜய்யின் `மெர்சல்` பட அனிமேஷன் டீசர்- பார்க்க!
விஜய் ரசிகர்கள் வெளியிட்ட மெர்சல் படத்தின் அனிமேஷன் டீசர் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படத்தின் டீசர் வரவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இருப்பினும் சில ரசிகர்கள் அனிமேஷனில் மெர்சல் படத்தின் டீசர் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அந்த அனிமேஷன் டீசர் தற்போது வைரலாகி உள்ளது.