தளபதி விஜய் நடித்துள்ள `Master` திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் (`Master`) படம் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் 100 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் ('Master') படம் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் 100 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாஸ்டர் (Master) திரையரங்குகளில் ஜனவரி 13 ரீலிஸ் ஆகும் என்ற செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவலை திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் இன்று திருப்பூரில் அறிவித்தார்.
அவர், நடிகர் விஜய்க்கு (Actor Vijay)நன்றி தெரிவித்துக் கொண்டார். பலரும் ஓ.டி.டி தளத்தில் தங்கள் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில் நாட்டம் காட்டும் நிலையில், திரையரங்கில் Master படத்தை வெளியிடலாம் என்ற முடிவு திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருப்பதாக அவர் நன்றி தெரிவித்தார்.
Also Read | இசை புயல் AR.ரஹ்மானின் தாய் கரீமா பேகம் காலமானார்..!
"பல OTT தளங்கள் மாஸ்டர் அணிக்கு லாபகரமான விலையை வழங்கின, ஆனால் படத்தை திரையரங்குகளில் (Cinema Hall) மட்டுமே வெளியிடும் முடிவில் விஜய் உறுதியாக இருந்தார். விஜய் தனது புதிய படத்தை உடனடியாகத் தொடங்க முடியும் என்றாலும், அவர் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். தமிழில் உள்ள மற்ற பெரிய நட்சத்திரங்கள் திரையரங்குகளைத் தவிர வேறு வகையில் படங்களை வெளியிடும் முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால், விஜய் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவது என்ற முடிவை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்” என்று சுப்பிரமணியம் தெரிவித்தார்.
Master திரைப் படம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவி றக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR