இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்ரம் பிரபுவிற்கு சகோதரியாக முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மடோனா செபாஸ்டியன் கதானாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.


தற்போது இயக்குனர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். அடுத்ததாக மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன் படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தன் இசையமைத்து வருகிறார்.