விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் ஆகியோர் சேர்ந்து களமிறங்கும் அடுத்த படம் தலைப்பு வெளியீடு...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கழுகு 2 படத்தை தயாரித்து வரும் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் தனது அடுத்த படம் குறித்து நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில்,``அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடிக்கவுள்ளார். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோ வேறு ஒருவர். 


ஹீரோ மற்றும் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பார்" என சஸ்பென்ஸ் வைத்தது. அதன்படி, இயக்குநர் லிங்குசாமி இன்று படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிப்பார் என்றும், இப்படத்திற்கு `வால்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது எனக் கூறி போஸ்டரை வெளியிட்டார். 


மாயவன் படத்துக்கு பிறகு பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் இந்தப் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இந்தப் படத்துக்கும் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை 'பேராண்மை', 'பூலோகம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். எனினும் கதாநாயகி யார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.