விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த படம் 'விக்ரம் வேதா'. இந்த படம் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது.


இப்படத்தில் மாதவன் காவல்துறை அதிகாரியாகவும், விஜய் சேதுபதி தாதாவாகவும் நடித்துள்ளனர். இப்படம் விக்ரம் வேதாளம் கதையை மையம் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.


விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. விமர்சனம் செய்யும் பலர் இந்த படத்தை புகழ்ந்துள்ளனர். 


விக்ரம் வேதா திரைப்படம் ரிலீஸாகி இன்றுடன் 25 நாட்கள் ஆனது, தமிழகம் முழுவதும் மற்றும் வடமாநிலத்தில் சில இடங்களில் இந்தப் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.