கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'மகான்' (Mahaan Movie).  இப்படத்தில் துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.  'சியான் 60' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இப்படத்திற்கு 'மகான்' என்று 20 ஆகஸ்ட் 2021 அன்று அதிகாரபூர்வ தலைப்பு வைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கடந்த 20 வருடத்தில் பார்க்காத கதை! தளபதி 66 குறித்து கூறிய விஜய்!



ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகியுள்ளது.   இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், நேபாளம், டார்ஜிலிங், சென்னை போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது.   இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அவர் இதிலிருந்து விலகி கொள்ள, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.  சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை குழு U/A  சான்றிதழ் வழங்கியுள்ளது.  



ஏற்கனவே இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக OTT இயங்குதளத்தில் வெளியாக  இருப்பதாக செய்திகள் வந்தது.  இந்நிலையில் 'மகான்' படம் மூன்று மொழிகளில் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ OTT இயங்குதளத்தில் வெளியாகப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இன்று மாலை 3 மணியளவில் வெளியாகும் என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.  இந்நிலையில் இரண்டு மணிக்கே இப்படம் OTTயில் வெளியாகிறது என்ற அறிவிப்பை அமேசான் வெளியிட்டது.  


 



மகான் திரைப்படம், "தனி மனித சுதந்திரத்திற்கான தேடலில் கருத்தியல் வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் செல்லும்போது குடும்பம் அவரை விட்டு வெளியேறும் ஒரு தனி மனிதனின் கதை.  இருப்பினும் அவர் தனது இலட்சியங்களை உணர்ந்ததால் அவர் தனது வாழ்க்கையில் தனது மகனின் இருப்பை இழக்கிறார்.  கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கிய நிலையில், வாழ்க்கை அவருக்கு தந்தையாகும் வாய்ப்பை வழங்குகிறதா? இந்த பரபரப்பான, அதிரடியான பயணத்தில் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக அவனது வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதே இந்த கதை" என்று அமேசான் தளத்தில் இப்படத்தின் கதை பற்றி கூறப்பட்டுள்ளது.


ALSO READ | 2022-ல் ஹிந்தியில் ரீமேக்காகும் 6 தமிழ் படங்கள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR