`விஐபி 2` : புதிய டீசருடன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'வேலையிட்டா பட்டதாரி 2' படம் சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி பலர் நடிக்கும் இப்படத்தை ஒண்டர்பார் நிறுவனம், தாணு இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார்.
இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி 2 படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவரும் என்று தனுஷ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புடன் புதிய டீசர் ஒன்றும் வெளியிட்டுள்ளார்.