’ஒத்த செருப்பு’ திரைப்படத்துக்குப் பிறகு ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பார்த்திபன். ஆசியாவின் முதல் சிங்கிள் ஷாட் படமாக உருவாகும் இப்படத்தை அகிரா புரொடக்ஷன்ஸ் அண்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் பயாஸ்கோப் எல்எல்சி யுஎஸ்ஏ ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 50 வயது முதியவரின் வாழ்க்கையைப் பற்றிய படமாக உருவாகும் இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஸ்டைல் ஹா, கெத்தா ரீஎண்ட்ரி கொடுத்த நடிகை பாவனா!


இரவின் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணி ரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கோட்டாலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மான் உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மூன்று பேருமே ஆஸ்கர் விருது வென்றவர்களாவர். இரவின் நிழல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கும் நிலையில், அப்படத்தின் இயக்குநர் குறித்து இசையமைப்பாளர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


அந்த வீடியோவில், சினிமா மீது தீராத ஆர்வம் கொண்டவர் இயக்குநர் பார்த்திபன். புதுமையான விஷயங்களை புதுமையாக செய்யும் அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இப்படத்திலும் புதுமையான முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். அவரின் முயற்சி எங்களையும் புதுமையான விஷயங்களை சிந்திக்க உந்துகிறது. இந்த விஷயம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.



இதேபோல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், தலைச்சிறந்த படைப்பின் காட்சிகளை இன்று நான் பார்த்துள்ளேன். எனக்குள் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிட்டார். இந்த தலைச்சிறந்த படைப்பை காண உலகம் காத்திருக்கிறது எனக் கூறியுள்ளார். தன்னுடைய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் பார்த்திபன், இன்னும் கூடுதல் ஆதரவு தேவை எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும் படிக்க | ராஷ்மிகாவின் நியூ லுக் – மெர்சலான ரசிகர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR