Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது (Bigg Boss Tamil) சீசன் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். இதற்கிடையில் ஐந்தாவது சீசனில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம்.


ALSO READ | குதூகலமாக இருக்கும் பிக்பாஸ் வீடு; புதிய ப்ரோமோ


இந்நிலையில் தற்போது இன்று மூன்றாவது நாளான பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இடையே சண்டை ஆரம்பித்துவிட்டது என்பது இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவில் தெரிய வருகிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் தங்களது சொந்த கதையை கூறி வரும் நிலையில் இமான் அண்ணாச்சி அடுத்ததாக தனது கதையை கூறுகிறார். அப்போது ஒரு நகைச்சுவை நடிகர் பிக்பாஸ் டைட்டில் வென்றால் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறுவது ப்ரோமோ வீடியோவில் தெரிகிறது.


 



 


மேலும் அவரது பேச்சிற்கு சிரித்ததாக நிரூப் மற்றும் சிபிச்சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை வருகிறது. பின்னர் நமீதா மாரிமுத்து கஷ்டப்படுகிறோம் கஷ்டப்படுகிறோம் என்று யாரும் சொல்ல வேண்டாம், கஷ்டப்பட்டால்தான் நல்ல நிலைக்கு செல்ல முடியும் என்று கூறுகிறார். அதே போல் சிபிசக்கரவர்த்தி மீண்டும் ஆவேசமாகிறார் கடைசியில் நமீதா மாரிமுத்து வீட்டில் சண்டை தான் ஆரம்பிக்க போகுது என கூறுவதுடன் இன்றைய முதல் ப்ரோமோ முடிவடைகிறது.


ALSO READ | Bigg Boss 5: மகிழ்வித்து மகிழ்! 100 நாட்கள் தொடரும் பிக் பாஸ் சீசன் தொடங்கியது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR