தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தில் அனிரூத் இசையமைத்திருக்கும் ’அரபிக் குத்து’ என்ற 'ஹலமிதி ஹபிபோ’ பாடல் வெளியட்ட சில மணிநேரங்களிலேயே மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தை கலங்கடித்தது. அடுத்தடுத்த நாட்களில் உலகளவில் ஹிட் அடித்த இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட தொடங்கினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தில் அனிரூத் இசையமைத்திருக்கும் ’அரபிக் குத்து’ என்ற 'ஹலமிதி ஹபிபோ’ பாடல் வெளியட்ட சில மணிநேரங்களிலேயே மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தை கலங்கடித்தது. அடுத்தடுத்த நாட்களில் உலகளவில் ஹிட் அடித்த இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட தொடங்கினர்.


மேலும் படிக்க | ரஷ்ய மொழியில் வெளியாகபோகும் கார்த்தியின் “கைதி” !



 


அதன்படி ராஜா ராணி படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் பார்வையையும் தன் மீது திருப்பிய இயக்குனர் அட்லீ பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இதில் அவருடன் சேர்ந்து அவரது மனைவி இணைந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர்களுடன் பிரபல கலை இயக்குனர் முத்துராஜும் ஆடியுள்ளார். தற்போது இவர்கள் நடனமாடிய இந்த வீடியோ செம வைரலாகி வருகின்றது. 


கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யை வைத்து இவர் இயக்கிய தெறி திரைப்படம் வசூல் சாதனை செய்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தார் இயக்குனர் அட்லீ. தற்போது இவர் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கிக்கொண்டிருக்கின்றார். 


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் - பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி உலகளவில் ரிலீஸாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. பூஜா ஹெக்டே நீண்ட இடைவெளிக்குப் பிறகு பீஸ்ட் மூலம் தமிழுக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கைதி படத்தில் தான் பணிபுரிந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த இந்த நடிகர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR