முடிந்தால் செஞ்சுபார் - கோலியை சீண்டும் காதலி அனுஷ்கா
ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு விராட் கோலி தலைவராக உள்ளார். தற்போது நடைபெற்று வரும்
ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் பெரும்பாலான வீரர்கள் தாடியுடன் தான் வலம் வருகிறார். இந்த நிலையில் கோடைகாலத்தை யொட்டி ரோகித் சர்மா ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தாடியை மழித்து ஸ்டைலை மாற்றியுள்ளனர்.
தாடியை குறித்து ஜடேஜா தனது டுவிட்டரில் கூறியது, ‘களத்தில் ஆட்டத்தை மாற்றுவோம். வீரர்களின் ஓய்வறையில் நமது தோற்றத்தை மாற்றுவோம். தாடிக்கு ஓய்வு கொடுப்போம்’ என்று கூறியுள்ளார்.
ஆனால் அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ள விராட் கோலி, தனது செல்ஃபி ஒன்றை சமூக வலைதளத்தில் போட்டு மன்னித்து விடுங்கள் நண்பர்களே, இப்போதைக்கு தாடிக்கு விடைகொடுக்க தயாராகயில்லை, என்று கூறியுள்ளார்.
அதற்கு, தனது காதலர் கோஹ்லியிடம் தாடியை ஷேவ் செய்ய வேண்டாம், அது உன்னால் முடியாது என பதிவிட்டிருந்தார் அவரது காதலி நடிகை அனுஷ்கா சர்மா.