நடிகர் விஷாலின் ‘அயோக்யா’ ட்ரைலர் வெளியானது
இன்று அயோக்யா படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநரான வெங்கட் மோகன் இயக்கத்தில் விசால் நடித்து வரும் படம் "அயோக்யா". இந்த படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி ஹிட ஆன "டெம்பர்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இந்த படத்தில் விஷாலுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். மேலும் ஆர். பார்திபன், கே.எஸ். ரவிக்குமார், பூஜா தேவியா, யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ஆனந்த் ராஜ், சோனியா அகர்வால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை சாம் சி.எஸ் அமைத்துள்ளார். எடிட்டிங் ரூபன் பார்க்கிறார். இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
ட்ரைலர்: