விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த தகவலை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.


பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். விஷாலும், அனிஷாவும் சில மாதங்களாக காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்தனர். 


இந்நிலையில் நடிகர் விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் தனியார் சொகுசு ஓட்டலில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.