திட்டமிட்டபடி வெளியாகிறது எனிமி திரைப்படம்
எனிமி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் விஷால்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எனிமி. மேலும் இந்தப் படத்திற்கு வினோத்குமார் தயாரித்துள்ளார்.
விஷால் (Vishal), ஆர்யா (Arya) நடிப்பில் உருவாகியுள்ள எனிமி (Enemy) படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், பின்னணி இசையமைப்பாளராக சாம் சி.எஸ், கலை இயக்குநராக ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். நவம்பர் 4 ஆம் தேதி அதாவது தீபாவளி வெளியாகவுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
ALSO READ | Sarpatta Parambarai: சார்பட்டா பரம்பரை வெளியீடு; Twitter விமர்சனம் இதோ
இதற்கிடையில் தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த திரைப்படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளது என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, தமிழகத்தின் பல வினியோக பகுதிகளில் எனிமி திரைப்படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் இன்னும் சில ஏரியாக்களில் மட்டும் திரையரங்குகளை எனிமி திரைப்படத்திற்கு இறுதி செய்ய வேண்டியுள்ளது. அந்த இறுதி வேலைகளும் நாளை வரை முடிந்துவிடும் என தெரிவிக்கின்றனர்.
இதனால் எனிமி திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 4 ஆம் தேதி அதாவது தீபாவளி தினத்தன்று வெளியாகிறது. மேலும் இந்த படம் தமிழகம் தவிர ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலும் வெளியாகிறது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் தெலுங்கு மாநிலங்களில் 600 திரையரங்குகளில் வெளியாவதாக விஷால் கூறியுள்ளார். அவன் இவன் படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எனிமி என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கொரோனாவிற்கு எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை இது தான் - விஷால்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR