நடிகர் விஷால் காயம் - படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்
துருக்கியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு நடிகர் விஷாலுக்கு கை, கால்களில் அடிபட்டுள்ளது.
துருக்கியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு நடிகர் விஷாலுக்கு கை, கால்களில் அடிபட்டுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - தமன்னா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துருக்கி நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பை 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக விஷால், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது அங்கு கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் விஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது வேகமாக சென்ற பைக் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பைக்கில் இருந்த விஷால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலுக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.