தற்போது நடிகர் கமல்ஹாசன் “விஸ்வரூபம்” படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் பல தடைகளை கடந்து திரைக்கு வந்தது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது “விஸ்வரூபம் 2” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் ராணுவ பயிற்சி அகாடமியில் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், நேற்று சென்னையில் ராணுவ பயிற்சி அகாடமியில் நடைபெறும் படப்பிடிப்பு புகைப்படத்தை தனது ட்விட்டார் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
அவரது கூறியதாவது:- “விஸ்வரூபம் 2” தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளுக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும் இந்த நாடும் பெருமை அடைகிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரத தாய்க்கு. “மா துஜே சலாம்” என்று கூறியுள்ளார்.