'தல' அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளிவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித் நடிக்கும் விவேகம் படம் அவருக்கு 57-வது படம் ஆகும். 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் கிட்டதட்ட ரூ. 90 கோடி செலவில் தயாரித்துள்ளது. 


விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 


இப்படத்தின் இசை உரிமைக்கு கடும் போட்டி நிலவி வந்தது. அஜித்தின் சமீபத்திய படங்கள் பலவற்றின் இசை உரிமையைப் பெற்ற சோனி நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையையும் வாங்கியுள்ளது. 


அதன்படி தல அஜித்தின் விவேகம் படத்திலிருந்து முதல் பாடல் சர்வைவா சூப்பர்ஹிட் ஆன நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடல் "தலை விடுதலை" தற்போது வெளிவந்துள்ளது.


பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக வருகிறது.