ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கபட்ட படம் 'விழித்திரு'. இப்படத்தை இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி உள்ளார். இதில் கிருஷ்ணா, வித்தார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'விழித்திரு' திரைப்படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகியுள்ளது.


இன்று 'விழித்திரு' படத்தின் பிரஸ் மீட் நடைப்பெற்றது. அப்பொழுது தன்சிகா, விழித்திரு படம் மிக பெரிய வெற்றி அடையும் எனக் கூறினார். இந்த பிரஸ் மீட்டில் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.